ADDED : மார் 07, 2024 06:52 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட, தி.மு.க., நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம், கடத்துாரில் நேற்று, தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் பேசுகையில், ''தர்மபுரி மாவட்டத்திற்கு, 11ல் வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி கிளைகளில் இருந்தும் கட்சியினர், பொதுமக்களை பங்கேற்க நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவர்கள் சென்று வர பஸ், காலை, மதிய உணவுகள் வழங்க வேண்டும். வரவேற்பு போஸ்டர்கள், பிரசுரங்கள் அனைத்து கிராமங்களிலும் மக்கள் பார்வை படும்படி ஒட்டபட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் செய்ய வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், நிர்வாகி கள் சித்தார்த்தன், சத்தியமூர்த்தி, சரவணன், முத்துக்குமார், சிவப்பிரகாசம், நெப்போலியன், நகர செயலாளர்கள் கவுதமன், ஜெயசந்திரன், மோகன், பேரூராட்சி தலைவர்கள் மணி, மாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

