ADDED : பிப் 25, 2024 03:54 AM
காரிமங்கலம்: தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், காரிமங்கலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. துணைச் செயலாளர் மணி வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பழனியப்பன், நடந்து முடிந்த சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து, பொதுமக்களிடையே எடுத்து செல்வது குறித்து கட்சியினருக்கு விளக்கினார்.
மேலும், வரும் லோக்சபா தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும். மார்ச், 1ல் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது, என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் சுப்ரமணி, பொருளாளர் முருகன், துணை செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், கோபால், அன்பழகன், முனியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.

