ADDED : ஆக 10, 2025 01:09 AM
தர்மபுரி, தர்மபுரிக்கு வரும், 17ம் தேதி வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து, கட்சி அலுவலகத்தில் நேற்று, கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, தர்மச்செல்வன், இன்பசேகரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளரும் எம்.பி.,யுமான மணி தீர்மானங்கள் குறித்து பேசினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆக., 16, 17ல் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். 'ரோடு ஷோ' மூலம், முதல்வர் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தால், அதற்கேற்றார்போல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், 'ஓரணி
யில் தமிழ்நாடு' திட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை விரைவு படுத்தி, 40 சதவீத இலக்கை அடைய வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பெரியண்ணன், வைகுந்தம், காவேரி, கருணாநிதி, வீரமணி, செல்வராஜ், பச்சையப்பன், கிருஷ்ணன், சக்தி
வேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் அசோக்குமார், மாவட்ட சுற்றுச்
சூழல் அணி அமைப்பாளர் இளையசங்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.