/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 11, 2025 06:32 AM
அரூர்: லோக்சபாவில், தி.மு.க., - எம்.பி.,க்களை அவதுாறாக பேசியதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், நேற்று மாலை தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மேற்கு மாவட்ட, ஐ.டி., விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் தலைமை வகித்தார். இதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன், அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது, போலீசார் அதை தடுத்தனர்.
* பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் தலைமையில் தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மும்மொழிக் கொள்கை, தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காததை கண்டித்தும், தமிழர்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் செயல்படும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் வைகுந்தம், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* தமிழக எம்.பி.,க்களை நாகரீகமற்றவர்கள் என கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று ராமியம்பட்டியில் கடத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன் தலைமையிலும், கடத்துார் பஸ் ஸ்டாண்டில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் தலைமையில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.