/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
/
அரூரில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
அரூரில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
அரூரில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 07, 2024 01:24 AM
அரூரில் தி.மு.க., ஓட்டுச்சாவடி
முகவர்கள் ஆலோசனை கூட்டம்
அரூர், நவ. 7-
தர்மபுரி மேற்கு மாவட்டம், அரூர் வடக்கு ஒன்றிய, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம், அரூரிலுள்ள வடக்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் வேடம்மாள் தலைமை வகித்தார்.
இதில், அரூர் தொகுதி பார்வையாளரும், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளருமான செல்லதுரை பேசியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற காரணம், அரூர் சட்டசபை தொகுதி. இங்கு, 40,000க்கும் அதிகமான ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.
இந்த வெற்றி வரும் சட்டசபை தேர்தலில் தொடர வேண்டும். அதன்படி, நாமும் திட்டங்களை வகுத்து, அரூர் தொகுதியில், 60,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். ஓட்டுச்சாவடி முகவர்கள் அதிக ஓட்டுக்கள் பெற்றுத்தர வேண்டும்.
வரும், 16, 17ல் நடக்கவுள்ள வாக்காளர் சிறப்பு முகாமில், இறந்தவர்கள் மற்றும் வெளியூர் சென்று விட்டவர்களின் பெயர்களை நீக்குவதுடன், நம் கட்சிக்கு ஓட்டளிக்கும் வகையில் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுகிறோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.