/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 09, 2025 03:53 AM
அரூர்: தர்மபுரி கிழக்கு மாவட்ட, அரூர் நகர, தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், (பி.எல்.ஏ., 2) அரூர் தி.மு.க., அலுவல-கத்தில் நடந்தது.
நகர செயலாளர் முல்லைரவி தலைமை வகித்தார். மாவட்ட 'ஐடி விங்' ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் வாக்காளர் விபரம் பூர்த்தி செய்வது குறித்த செயல்முறையை விளக்கி பேசினார். கூட்டத்தில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., திட்டத்தை கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தை கண்டித்து, மதச்சார்பற்ற முற்-போக்கு கூட்டணி சார்பில், தர்மபுரியில், வரும், 11ல் நடக்க-வுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் அதிகளவில் கலந்து கொள்வது. வரும், 13ல் அரூரில் அமைச்சர் வேலு தலைமையில் நடக்கும் கூட்-டத்தில், பி.எல்.ஏ., 2க்கள் அனைவரும் கலந்துக்கொள்வது, எஸ்.ஐ.ஆர்., திட்டத்தில் அனைத்து பி.எல்.ஏ., 2, பி.டி.ஏ., பி.எல்.சி., மற்றும் கிளைகழக செயலாளர்கள் அனைவரும், பி.எல்.ஓ., உடன் வீடுவீடாக சென்று வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. இதில், மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர்.

