/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளிகளில் திருடிய ஐந்து பேர் கும்பல் கைது
/
அரசு பள்ளிகளில் திருடிய ஐந்து பேர் கும்பல் கைது
ADDED : நவ 09, 2025 03:53 AM
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம், அதியமான்-கோட்டை, பாப்பாரப்பட்டி, மதிகோண்பாளையம் உள்ளிட்ட பகுதி அரசு பள்ளிகளில் சமீப காலமாக கம்யூட்டர், பிரிண்டர், யு.பி.எஸ்., உள்ளிட்டவை தொடர்ச்சியாக திருடு போனது.
கடந்த, 1ம் தேதி பாலக்கோடு அருகே சோமனஹள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியரின் அறையின் பூட்டை உடைத்து, கம்ப்யூட்டர், பிரிண்டர் திருடு போனது. இந்நி-லையில், எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே சந்தேகத்தின் பேரில், 5 பேரை, பாலக்கோடு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள், அரசு பள்ளிகளில் திருட்டில் ஈடுபட்டவர்கள் என தெரி-யவந்தது. விசாரணையில் அவர்கள், கிட்டம்பட்டி பரத்குமார், 19, முடகேரி யோகக்குமார், 20, செக்கொடியை சேர்ந்த பார்த்-தசாரதி, 20, பாப்பாரப்பட்டி ரமேஷ், 20, மற்றும் 18 வயது சிறுவன் என தெரிந்தது. அவர்கள், 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்-திய, 2 கார்கள், லேப்டாப், கம்ப்யூட்டர், பிரிண்டர், புரொ-ஜெக்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

