/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., பேரூராட்சி தலைவர் தற்கொலை முயற்சி
/
தி.மு.க., பேரூராட்சி தலைவர் தற்கொலை முயற்சி
ADDED : ஜூன் 30, 2025 04:15 AM
பாலக்கோடு: மாரண்டஅள்ளியில், தி.மு.க.,வை சேர்ந்த பேரூராட்சி தலைவர் தற்கொலை முயன்றுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவராக உள்ளவர். தி.மு.க.,வை சேர்ந்த வெங்கடேசன், 50. இவர், தி.மு.க., பேரூர் செயலாளருமாகவும் உள்ளார். நேற்று மாலை, 6:00 மணியளவில், வீட்டின் அறையை உள்பக்கம் தாழிட்டு, மின்-விசிறியில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை-பார்த்து அவர் மனைவி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து, கதவை உடைத்து, அவரை காப்பாற்றினர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்கு பைசுஅள்ளியி-லுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கடன் பிரச்னை இருந்த-தாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த பேரூராட்சி தலைவர் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், தி.மு.க.,வினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப-டுத்தி உள்ளது.