/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் நாளை தி.மு.க., செயற்குழு
/
தர்மபுரியில் நாளை தி.மு.க., செயற்குழு
ADDED : மே 24, 2024 07:03 AM
தர்மபுரி : தர்மபுரியில், தி.மு.க., கிழக்கு மாவட்ட செயற்குழு நாளை நடக்கிறது.
இது குறித்து, கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆலோசனைப்படி, தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நாளை சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்கிறார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி பேசுகிறார். இதில், ஜூன், 3ல் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது, கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, கட்சியின் இந்நாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாநில, மாவட்ட, தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை மற்றும் அணிகளின் தலைவர்கள் உள்பட அனைவரும் பங்கேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.