/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மக்களுக்கு உதவி தொகை கொடுத்து மிரட்டி ஓட்டு வாங்க தி.மு.க., திட்டம்'

ADDED : அக் 29, 2024 01:22 AM
'மக்களுக்கு உதவி தொகை கொடுத்து
மிரட்டி ஓட்டு வாங்க தி.மு.க., திட்டம்'
கிருஷ்ணகிரி, அக். 29-
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது: இன்னும் சில மாதங்களில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் வருகிறது. அதை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாட வேண்டும். ஏனென்றால், அதற்கு அடுத்த ஆண்டான, 2026 ல் தேர்தல் கட்டுப்பாடுகள் வந்து விடும். எனவே, தற்போதே தயாராகுங்கள். பஞ்.,க்கள் தோறும் கம்பங்களில் புதிய கட்சி கொடியை பறக்க விடுங்கள். கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளன. தற்போதைய, தி.மு.க., அரசு மாதாந்திர உதவித்தொகை என, 1,000 ரூபாயை மட்டும் கொடுத்து வருகிறது. தி.மு.க.,வுக்கு ஓட்டு போடா விட்டால், அந்த பணம் கூட கிடைக்காது எனக்கூறி மிரட்டுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, அவைத்தலைவர் சுந்தர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.