/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பி.டி.ஓ., ஆபீஸ் வளாகம் அருகே குப்பையில் கிடந்த ஆவணங்கள்
/
பி.டி.ஓ., ஆபீஸ் வளாகம் அருகே குப்பையில் கிடந்த ஆவணங்கள்
பி.டி.ஓ., ஆபீஸ் வளாகம் அருகே குப்பையில் கிடந்த ஆவணங்கள்
பி.டி.ஓ., ஆபீஸ் வளாகம் அருகே குப்பையில் கிடந்த ஆவணங்கள்
ADDED : ஜூன் 27, 2025 01:30 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு சாலையில் பி.டி.ஓ., அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், கருவூலகம், பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, அருகில் உதவி கலெக்டர் அலுவலகம் உட்பட, 13 அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
நேற்று மதியம் கிருஷ்ணகிரி பி.டி.ஓ., அலுவலகம் அருகே ஏராளமான விண்ணப்பங்கள் கிடந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர். அதை எடுத்து பார்த்தபோது, அதில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள், அனுமதி வழங்கப்பட்டதற்கான ஆணை, வங்கி சேமிப்பு கணக்கின் புத்தக முதல் பக்க நகல், ரேஷன் கார்டு நகல், கட்டப்படும் வீட்டின் முன்பு பயனாளிகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீட்டிற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விபரங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
அரசு அலுவலகங்களில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விண்ணப்பங்களை பொதுமக்கள் கொடுக்கிறார்கள். அதில் அவர்களின் வங்கி கணக்கு விபரங்கள், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட பல விபரங்களை இணைத்து கொடுக்கிறார்கள். இவை அனைத்தும் ரகசியமாக காக்க வேண்டியவை.
யாரிடமும் ஆதார் அட்டை எண்ணை, வங்கி சேமிப்பு கணக்கு எண்ணை கொடுக்காதீர்கள் என, அரசே பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குகிறது. ஆனால் அரசு அலுவலர்களே, அந்த ஆவண நகல்களை, குப்பையில் துாக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி பி.டி.ஓ., உமாசங்கரிடம் கேட்டபோது, ''இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.