தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஓட்டு கேட்டு வர வேண்டாம்: அறிவிப்பு பேனரால் பரபரப்பு

ஓட்டு கேட்டு வர வேண்டாம்: அறிவிப்பு பேனரால் பரபரப்பு

ஓட்டு கேட்டு வர வேண்டாம்: அறிவிப்பு பேனரால் பரபரப்பு


ADDED : மார் 07, 2026 09:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 09:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பொ.மல்லாபுரம் பேரூராட்சி, 15வது வார்டுக்கு ஓட்டு கேட்டு வராதீர் என, அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 15வது வார்டு மஜித் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், 'ஓட்டு கேட்க வராதீர்கள்' என்ற பேனரை அப்பகுதியில் வைத்துள்ளனர். அதில், அரசுக்கு தானமாக நிலம் வழங்கப்பட்டது. அந்த பகுதியில் இதுவரை மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்டவைகளை அரசு செய்து கொடுக்கவில்லை. அடிப்படை வசதி செய்து கொடுக்காத அதிகாரி கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., உள்ளிட்ட அனைவரிடமும் பலமுறை மனு கொடுத்தோம்.

செய்து தருகிறோம் என கூறினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எங்கள் பகுதிக்கு கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பொய் வாக்குறுதிகளை சொல்லி கொண்டு ஓட்டு கேட்டு வராதீர்கள்,' என, வாசகம் இடம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us