ADDED : ஜன 14, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பாரப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், தர்மபுரி மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் சார்பில், சமத்-துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சாரதி வர-வேற்றார்.மாநில துணைத்தலைவர் கலைச்சுடர்மணி சின்னசாமி, மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் முருகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்பாரப்பட்டி பேரூராட்சி சேர்மன் பிருந்தா கலை-ஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்
வழங்கி வாழ்த்தினார்.பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், தி.மு.க., நகர செயலாளர் சண்முகம், திரைப்பட நடிகர் சிங்காரவேலன், பேரூராட்சி கவுன்சிலர்கள், சங்க நிர்வாகிகள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள்,
புராண கதை நாயகர்கள் போல் வேடமிட்டு கலந்து கொண்டனர்.