தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தண்ணீர் டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி

தண்ணீர் டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி

தண்ணீர் டேங்கர் லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி


ADDED : செப் 03, 2026 02:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 02:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் டேங்கர் லாரி மீது, அரசு பஸ் மோதிய விபத்தில், பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார், 10 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு தமிழக அரசின், 'ஏசி' வசதி கொண்ட பஸ்சை, தர்மபுரி மாவட்டம், கடத்துார் அடுத்த சில்லாரஹள்ளியை சேர்ந்த சரவணன், 55, ஓட்டி வந்தார். கண்டக்டர் உட்பட, 30 பயணிகள் பயணம் செய்-தனர்.நேற்று காலை, 11:15 மணிக்கு ஓசூர் - தர்மபுரி புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோடு அருகே, வீரன்கொட்டாய் பகு-தியில் பஸ் வந்து கொண்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனிலுள்ள செடிகளுக்கு, டேங்கர் லாரி மூலம், சாலை பராமரிப்பு குழுவை சேர்ந்த ஊழியர்கள் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது, டேங்கர் லாரியின் பின்புறத்தில் பஸ் மோதியது.

இதில், பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில், பஸ் டிரைவர் சரவணன், சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் சங்கர் உட்பட படுகாயமடைந்த, 10 பேர் மீட்கப்பட்டு, 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம், பாலக்-கோடு மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்-டனர். மகேந்திரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us