ADDED : ஜன 25, 2026 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழகம் முழுவதும் ஜன., 24ஐ ஓட்டுனர் தினமாக கொண்டா-டப்படுகிறது. அதன் படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் 'ஓட்டுனர் தினம்' கொண்டா-டப்பட்டது. தர்மபுரி அலுவலகத்தில், போக்கு
வரத்து கழக தர்மபுரி மண்டல பொதுமேலாளர் செல்வம், ஓட்-டுனர் தினத்தையொட்டி, ஓட்டுனர் மற்றும் கண்டக்டர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோல், தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழக அலுவலகங்-களில் ஓட்டுனர் மற்றும் கண்டக்டர் என, 4,723 பேருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடினர். நேற்று முன்தினம், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்-களுக்கு இலவச கண் மற்றும் உடல் பரிசோதனை நடத்தப்பட்-டது.

