தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வறட்சியால் சாகுபடி செய்யாத நிலங்களுக்கும் இழப்பீடு தேவை'

வறட்சியால் சாகுபடி செய்யாத நிலங்களுக்கும் இழப்பீடு தேவை'

வறட்சியால் சாகுபடி செய்யாத நிலங்களுக்கும் இழப்பீடு தேவை'


ADDED : அக் 10, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2026 06:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: எல்நினோ பதிப்பால், சாகுபடி செய்ய முடியாமல் தவிர்க்கப்பட்ட நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென, தர்மபுரி கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தர்மபுரி கோட்டத்துக்கு உட்பட்ட தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய, 5 வட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி ஆர்.டி.ஓ., (பொ) ஜெய்சங்கர் தலைமை வகித்தார். விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.இதில், அவர்கள் பேசியதாவது: நடப்பு ஆண்டில் எல்நினோ பாதிப்பால், போதிய மழைப்பொழிவு இல்லாமல் விவசாயம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த பாதிப்பு இரு வகைப்படும். ஒன்று, பல்வேறு பயிர்களை நடவு செய்தும் மழையின்றி அவை கருகி இழப்பு ஏற்பட்டது. மற்றொன்று, எந்த பயிரும் நடவு செய்யாமல் தரிசு நிலமாக விடப்பட்டுள்ளது. இவை இரண்டும் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, வறட்சியால் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவது போன்று, பயிரிட முடியாமல் தரிசாக விடப்பட்ட விவசாய நிலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

தர்மபுரி நகரில் பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள இடங்களில் சாலைகள், நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். அதேபோல், பஸ் ஸ்டாண்டுகளில் தனியாருக்கு சொந்தமான பைக் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் இடையூறு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு பேசினர்.

மாவட்ட கலெக்டர் சரவணன், கூட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். துணை தாசில்தார்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us