UPDATED : அக் 10, 2026 06:51 AM
ADDED : அக் 10, 2026 06:14 AM

அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி அருகே, திருப்பத்துார் - தர்மபுரி சாலையில், மதிகோன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே, பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக, கடந்த ஆண்டு சாலையில், பள்ளம் தோண்டப்பட்டது. மேலும், பள்ளங்கள் மண் கொட்டி மூடிய நிலையில், ஆங்காங்கே மண் மேடுகளாக காணப்படுவதால், இருவழி சாலை ஒரு வழியாக மாற்றப்
பட்டுள்ளது.
இதன் காரணமாக, மதிகோன்கோளையம் பகுதி முதல், துாதரையான்கொட்டாய் வரையிலான சாலையில், அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே, பல மாதங்களாக மண் மேடுகளாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
