ADDED : அக் 10, 2026 06:15 AM
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, பூதனஹள்ளி பஞ்.,க்குட்பட்ட கல்குவாரி பகுதியில், மின்மோட்டார் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பூதனஹள்ளி பஞ்.,க்குட்பட்ட கொட்டாய்மேடு பகுதியில், கைவிடப்பட்ட அரசுக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இதில், தேங்கி கிடக்கும் மழைநீரை கால்நடைகள் பயன்பாட்டிற்காக, அதேபகுதியை சேர்ந்த ராஜாமணி, 67. என்பவர் மின் மோட்டார் மூலம், தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பூதனஹள்ளி பஞ்., சென்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பூவரவசன், 29, சேட்டு, 32, ஆகிய இருவரும் கல்குவாரியில் இருந்த ராஜாமணிக்கு சொந்தமான மின்மோட்டார் மற்றும் மின் ஒயர்களை திருடிச்செல்ல முயன்றனர். இதனை பார்த்த ராஜாமணி அப்பகுதி மக்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தார். புகார்படி, அதியமான்கோட்டை போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
