/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பஸ் கண்ணாடி உடைத்த போதை ஆசாமி கைது
/
பஸ் கண்ணாடி உடைத்த போதை ஆசாமி கைது
ADDED : ஜூலை 26, 2025 12:56 AM
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
காரிமங்கலம் வழியாக, 6 பி எண் கொண்ட அரசு டவுன் பஸ், பயணிகளுடன் திப்பம்பட்டி நோக்கி சென்றது, டிரைவர் பாரதிராஜா ஓட்டினார். வெற்றிகுமார் என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். இந்த பஸ் திண்டல் ஊராட்சி சவுளுப்பட்டி பகுதியில் சென்றபோது, ரோட்டில் தள்ளாடியபடி நடந்து சென்றவரை, விலகி செல்லும்படி டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, டிரைவருடன் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது பஸ்ஸில் பயணம் செய்தவர்கள், போதை ஆசாமியை கண்டித்துள்ளனர். இதையடுத்து அவர் சென்று விட்டார். இந்நிலையில், பஸ் திப்பம்பட்டி சென்று விட்டு மீண்டும் காரிமங்கலம் நோக்கி சென்றது. அப்போது சவுளுப்பட்டி பகுதியில் நின்றிருந்த போதை ஆசாமி, பஸ் முன்புறம் மீது கல் வீசி எரிந்து விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதில், பஸ் முன்புற கண்ணாடி உடைந்து, டிரைவர் மற்றும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்து கண்டக்டர் வெற்றிகுமார் கொடுத்த புகார்படி, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி ஆகியோர், தப்பி ஓடிய மேல் சவுளுப்பட்டியை சேர்ந்த கணேசன், 32, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.