/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதை பொருள் ஒழிப்பு: பள்ளியில் விழிப்புணர்வு
/
போதை பொருள் ஒழிப்பு: பள்ளியில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 07, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் அடுத்த ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் செல்வநாயகி தலைமை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் முருகன் வரவேற்றார். கடத்துார் எஸ்.எஸ்.ஐ., சேகர், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை ஒழிக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு
விளக்கினார்.
இதில், பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பாலு நன்றி கூறினார்.