/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதை பொருள் ஒழிப்பு ஆய்வு கூட்டம்
/
போதை பொருள் ஒழிப்பு ஆய்வு கூட்டம்
ADDED : நவ 05, 2024 01:21 AM
தர்மபுரி, நவ. 5-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழித்தல் துறை அலுவலர்களுடனான, வாராந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்களிடையே போதை பொருட்கள் பயன்பாடு இருந்தால், விடுதி காப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக இது குறித்து, போதை பொருட்கள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருந்துகள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்யும் கடைகளில்
அடிக்கடி மருந்து ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, போதை பொருட்கள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக்குழு ஒருங்கிணைந்து செயல்பட்டு, போதை பொருட்கள் பயன்பாட்டினை முழுமையாக ஒழிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், டாஸ்மாக் மேலாளர் மகேஷ்வரி, கலால் உதவி ஆணையர் நர்மதா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானுசுஜாதா, தேசிய நல குழும நியமன அலுவலர் ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

