/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 24, 2025 01:19 AM
அரூர், அரூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போலீசார் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. 9ம் வகுப்பு முதல்,
பிளஸ் 2 வரையிலான மாணவியர் பங்கேற்றனர்.
முகாமில், தர்மபுரி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., ராஜேஷ் பேசினார். அப்போது அவர், மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக்கூடாது. போதை பழக்கத்தால், பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. போதை பொருள் விற்பனையை தடுக்க, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம், உயர்கல்வி மற்றும் காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து விளக்கினார். மேலும், போதை பொருள் பயன்பாட்டை தடுக்க, தங்கள் உறவினர்கள், நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். தொடர்ந்து, போக்சோ சட்டம் தொடர்பாக விளக்கம் அளித்ததுடன், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்பவர்கள் மீது போலீசில் புகார் செய்யலாம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
அதேபோல், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., ராஜேஷ் பேசினார். மாணவர்கள், உற்கல்வி ஆசிரியர் பழனிதுரை மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.