அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசார் விசாரணையில், அதிகாலை, 3:00 மணிக்கு ஏ.டி.எம்., மையத்திற்குள் பணம் எடுப்பது போல் நுழைந்த மர்ம நபர்கள், இரும்பு கம்பியால் ஏ.டி.எம்., இயந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்துள்ளனர். பின், அதிலிருந்து பணத்தை எடுக்க முடியாமல், கம்பியை அங்கேயே விட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. தகவலின்படி வந்த ஏ.டி.எம்., மைய தொழில்நுட்ப பணியாளர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை திறந்து பார்த்ததில், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை எனத் தெரிவித்தனர்.
ஏ.டி.எம்., இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் ஏ.டி.எம்., மையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதில், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மொரப்பூர் போலீசார் வழக்குப்
பதிந்துள்ளனர்.