தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்

துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்


ADDED : ஜூலை 04, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 04:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி; தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை, துர்க்கையம்மன் கோவில் லட்-சார்ச்சனை விழாவையொட்டி நடந்த தேரோட்-டத்தில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி டவுன் குமாரசாமிப்பேட்டை, சிவசுப்பிர-மணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம் லட்சார்ச்சனை தேர்த்திருவிழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டு துர்க்கையம்மன் கோவில், 35-வது தேர்த்திருவிழா கடந்த, 25-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, மாரியம்மன் கோவில் அருகில் இருந்து பால்குட ஊர்வலம் நடந்தது.தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், உபகார பூஜைகள் நடந்தன. விழாவில் தொடர்ந்து, 7 நாள் தினமும் காலை, மாலை, இரவு என, 3 காலங்களிலும் துர்க்கையம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் ஹோமம், 108 சங்காபி-ஷேகம் மற்றும் காசி கங்கை தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு நடந்தது.நேற்று துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. காலை பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை மின்விளக்கு அலங்காரத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டமும் நடந்தது. இதில், திர-ளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடக்கி-றது. விழா ஏற்பாடுகளை துர்க்கையம்மன் திரு-விழா குழுவினர் செய்திருந்தனர்.-

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us