ADDED : ஜூலை 05, 2026 02:59 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் தாள் தேர்வு, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி செந்தில் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என, ஆறு தேர்வு மையங்-களில் நேற்று நடந்தது.
முதல்தாள் தேர்வு எழுத, 1,714 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 1,684 பங்கேற்று தேர்வு எழுதினர். 30 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இன்று, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பழைய தர்மபுரி அரசு மேல்-நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி என மொத்தம், 21 தேர்வு மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்விற்கான, 2ம் தாள் தேர்வு நடக்கிறது.இத்தேர்வு எழுத மொத்தம், 5,678 பேர் தேர்வு எழுத உள்-ளனர். தேர்வு மையங்கள் வழியாக வந்து செல்லும் அனைத்து பஸ்களும் தேர்வு மையம் முன் நின்று செல்ல, மாவட்ட நிர்-வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்-டணம் பகுதிகளில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 7 மையங்களில் தேர்வு நடந்தது. நேற்று நடந்த இடைநிலை ஆசி-ரியர் பணிக்கான முதல்தாள் தேர்வுக்கு, 2,118 பேர் விண்ணப்பித்-திருந்த நிலையில், 2,049 பேர் தேர்வெழுதினர், 69 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ், டிஜிட்டல் வாட்ச் அணியவும், மொபைல், மைக்ரோபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்-களை பயன்படுத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தடை விதித்தது. இன்று (5ம் தேதி) பட்டதாரி ஆசிரியர் பணிக்கான 2ம் தாள் தேர்வு நடக்கிறது.
