ADDED : ஜூலை 14, 2025 04:13 AM
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, துர்க்கையம்மன் கோவிலில், ஆண்-டுதோறும் ஆனி மாதம் லட்சார்ச்சனை தேர் திருவிழா, 10 நாட்கள் நடப்பது வழக்கம்.
அதன்படி, கோவிலில், 34-ம் ஆண்டு லட்சார்ச்சனை தேர் திருவிழா கடந்த, 5- அன்று தொடங்கியது. விழாவையொட்டி, மாரியம்மன் கோவில் அருகில் இருந்து, பால்-குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை வந்தடைந்த-வுடன், துர்க்கையம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், வழிபா-டுகள் மற்றும் உபகார பூஜை நடந்தது. இதில், 7 நாட்கள் தினமும் மூன்று காலங்களிலும் துர்க்கையம்மனுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார சேவை மற்றும் மஹா தீபாரா-தனை நடந்தது. நேற்று துர்க்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில், காலை பெண்கள் மற்றும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை மின் விளக்கு அலங்காரத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கும் தேரோட்டமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.