/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., துண்டுடன் நடனம்; கல்வி அதிகாரிகள் விசாரணை
/
தி.மு.க., துண்டுடன் நடனம்; கல்வி அதிகாரிகள் விசாரணை
தி.மு.க., துண்டுடன் நடனம்; கல்வி அதிகாரிகள் விசாரணை
தி.மு.க., துண்டுடன் நடனம்; கல்வி அதிகாரிகள் விசாரணை
ADDED : மார் 25, 2025 02:18 AM
தர்மபுரி : தர்மபுரி நகராட்சி, சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில், கடந்த 21ல் நடந்த ஆண்டு விழாவில், 'பொதுவாக என் மனசு தங்கம்' என்ற பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.
நகராட்சி, ஒன்பதாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மாதேஸ்வரன் மேடையில் ஏறி, தான் அணிந்திருந்த தி.மு.க., கட்சி துண்டை மாணவர்களுக்கு அணிவித்து, உற்சாகமாக நடனமாடினார்.
இந்த வீடியோ பரவியது. இதேபோல், சில வாரங்களுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பள்ளி விழாவில், பா.ம.க., துண்டை மாணவர்கள் அணிந்து நடனமாடிய சம்பவத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தி.மு.க., துண்டு அணிந்து, பள்ளி விழா மேடையில் நடனமாடியது குறித்து நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்தது.
தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தென்றல் அறிவுறுத்தல்படி, வட்டார கல்வி அலுவலர் ஜீவா, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமியிடம் நேற்று நேரில் விசாரித்தார்.
விரிவான அறிக்கை, மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.