ADDED : ஜூன் 24, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை, பென்னாகரம் அடுத்த, மாங்காபட்டியை சேர்ந்த ஜெய்கணேஷ், 54. இவர், சேலம் மாவட்டம், டால்மியா கம்பெனி அருகில், தண்ணீர் தொட்டி கம்பெனி வைத்து, தொழில் செய்து வந்தார். கடந்த, 21 அன்று வேலை தொடர்பாக,
ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், ஓசூர் சென்று விட்டு அன்று நள்ளிரவு, 1:00 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம் புறவடை பிரிவு சாலை அருகே சென்றபோது, முன்னாள் சென்ற மகேந்திரா மேக்ஸ் சரக்கு வாகனத்தின் மீது மோதி படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த, 22 அன்று காலை, 8:30 மணிக்கு இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.