/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம்
ADDED : நவ 18, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஓட்டுச்
சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம், கடந்த, 2 நாட்களாக நடந்தது. நேற்று செட்ரப்பட்டி, எச்.அக்ரஹாரம் உள்ளிட்ட ஓட்டுச்சாவடிகளில், அரூர் தொகுதி, தி.மு.க., பொறுப்பாளர் செல்லதுரை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தி.மு.க., பூத் ஏஜன்ட்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டவர்களின் விபரம் குறித்து கேட்டறிந்தார்.