ADDED : ஜன 08, 2026 05:02 AM
தர்மபுரி: மின் வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கோரி, சி.ஐ.டி.யூ., மின் ஊழியர் மத்திய அமைப்பினர், தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி கோட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஜீவா, மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம், தனியார் மயம் செய்வதை அனுமதிக்கக்கூடாது.
ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். மின் வாரியத்திலுள்ள, 42,000 ஆரம்ப கட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை அடையாளங்கண்டு வாரியம் சார்பில் தினக்கூலி, 766 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

