/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிராக்டர் மூலம் கொண்டு சென்ற மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
/
டிராக்டர் மூலம் கொண்டு சென்ற மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
டிராக்டர் மூலம் கொண்டு சென்ற மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
டிராக்டர் மூலம் கொண்டு சென்ற மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
ADDED : ஏப் 19, 2024 06:55 AM
பென்னாகரம், : பென்னாகரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கோட்டூர் மலை கிராமத்திற்கு கழுதைகளுக்கு மாற்றாக, டிராக்டர் மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது.
தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் மலை, ஏரிமலை, அலக்கட்டு மலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதி இல்லாததால், கடந்த, 2021 சட்டசபை தேர்தல் வரை, கழுதைகள் மூலம் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. 2021 சட்டசபை தேர்தலை, கோட்டூர் மலை கிராம மக்கள் புறக்கணிப்பதாக அறிவித்து, அங்கு ஓட்டுப்பதிவு நடக்கவில்லை. மலை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, மண் சாலை அமைத்து, நடவடிக்கை எடுத்ததால், இன்று நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அழியா மை, விவி பேட் இயந்திரம் ஆகியவை முதன் முறையாக, டிராக்டர் மூலம், கொண்டு சென்றனர். மலை அடிவாரத்தில் இருந்து, மலையின் மேல் பகுதிக்கு, 5 கி.மீ., கரடு முரடான மண் சாலையில், போலீஸ் பாதுகாப்புடன், கொண்டு சென்றனர். கோட்டூர் மலை ஓட்டுச்சாவடியில், ஆண் வாக்காளர்கள், 163, பெண் வாக்காளர்கள், 151 பேர் என, 314 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், ஏரிமலை மற்றும் அலக்கட்டு மலையில் ஆண்கள், 182, பெண்கள், 141 பேர் உட்பட, 323 என, 3 மலை கிராம ஓட்டுசாவடிகளில், 637 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

