ADDED : செப் 17, 2025 01:54 AM
தர்மபுரி :தமிழகம் முழுவதும் அதிக விபத்துகள் நடக்கும், 100 இடங்களை தேர்வு செய்து, அதில் முதல் கட்டமாக, 50 இடங்களில், பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் நிகழ்ந்தால், பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இது, 'தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன் முயற்சி மற்றும் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டம்' அறிவுறுத்தலின் படி, 108 ஆம்புலன்ஸ் சேவையை நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்தின் மூலம் நடந்து வருகிறது.
அதன்படி, சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், விபத்து அதிகம் நடக்கும், தர்மபுரி மாவட்டம், குணடலப்பட்டியில் பஸ் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு அவசரகால முதலுதவி பயிற்சி, தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது.
இதில், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி தலைமை வகித்து, முதலுதவி சிகிச்சை குறித்து பேசினார். அவசர உதவி பயிற்சியாளர் சந்திரசேகர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களுக்கு எவ்வாறு முதலுதவி வழங்க வேண்டும் என்பதை செயல்விளக்கம் அளித்தார்.இதில், 108 ஆம்பு லன்ஸ் சேவையின் மாவட்ட மேலாளர் ரஞ் சித் மற்றும் மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் அரவிந்தன், சிவா ஆகியோர் உடனிருந்தனர்.