/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் துறையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
தனியார் துறையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : அக் 04, 2024 01:09 AM
தனியார் துறையில் நாளை
வேலைவாய்ப்பு முகாம்
தர்மபுரி, அக். 4-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியில் நாளை நடக்கவுள்ளதாக, தர்மபுரி கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் நாளை அக்., 5 காலை, 8:00 மணி முதல், 2:00 மணி வரை, தர்மபுரி சேலம் சாலையிலுள்ள அரசு கலைக் கல்லுாரியில் நடக்கவுள்ளது. இதில், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு வரை படித்த, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை தேர்வு செய்யலாம். எனவே, வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.