/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி
/
மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி
ADDED : டிச 25, 2024 01:57 AM
மின் சிக்கன வாரவிழா விழிப்புணர்வு பேரணி
பாலக்கோடு, டிச. 25-
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி மின்வாரியம் சார்பில், தேசிய மின்சிக்கன வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி, பாலக்கோடு கோட்ட செயற்பொறியாளர் வனிதா தலைமையில் நடந்தது.
இதில், மாரண்டஹள்ளி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து, மின் சிக்கனம் மற்றும் மின்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை, கோட்ட செயற்பொறியாளர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி மாரண்டஹள்ளி, கடைவீதி, 4 ரோடு, மாரண்டஹள்ளி பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று, மீண்டும் மின்வாரியத்தை சென்றடைந்தது. பேரணியில், மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், மழை காலங்களில், அறுந்து விழுந்த மின் கம்பிகளை தொடக்
கூடாது. மின் துண்டிப்பு ஏற்பட்டால், உடனடியாக மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
* கடத்துார் மின்வாரியத்துறை சார்பில் பொம்மிடியில், மின் சிக்கனம், பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. கோட்ட செயற்பொறியாளர் செந்தில் ராஜ் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பொம்மிடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து துரிஞ்சிப்பட்டி, நடுர் பொம்மிடி கடைவீதி, ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று மீண்டும் பொம்மிடி பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. பேரணியில் கடத்துார், மொரப்பூர், பொம்மிடியை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அலுவலர்கள்
உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.