/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மெய்நிகர் நுாலகத்தில் 1,500 மாணவர்கள் சேர்ப்பு
/
மெய்நிகர் நுாலகத்தில் 1,500 மாணவர்கள் சேர்ப்பு
ADDED : செப் 06, 2024 07:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் முழுநேர கிளை நுாலகத்தில் மாணவ, மாணவியரின் நலனுக்காக மெய்நிகர் நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில், அரசு பள்ளி மாணவர்களை நுாலக உறுப்பினர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் கோகிலவாணி தலைமை வகித்தார். இதில், பொ.மல்லாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர், 1,500 பேர் உறுப்பினராக இணைந்தனர். ஆசிரியர்கள், 5 பேர் புரவலாக இணைந்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கடத்துார் கிளை நுாலக, நுாலகர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர், நூலகர்கள் கலந்து கொண்டனர் .