/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
/
பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி
ADDED : நவ 20, 2025 01:37 AM
பென்னாகரம், பென்னாகரத்தில், நபார்டு வங்கி மற்றும் ஆர்.ஆர்.சி., தொண்டு நிறுவனம் இணைந்து, கிராம அளவிலான பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நேற்று, நடந்தது.
பென்னாகரம், நவதானிய உழவர் உற்பத்தி நிறுவனத்தில் நடந்த பயிற்சி மற்றும் கூட்டு பொறுப்புக்குழு முகாமுக்கு, பண்பாட்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் நர்மதா தலைமை வகித்தார்.
டீப்ஸ் தொண்டு நிறுவன இயக்குனர் சங்கர் முன்னிலை வகித்தார்.
ஆர்.ஆர்.சி., கொண்டு நிறுவன இயக்குனர் ராமசாமி வரவேற்றார். இந்தியன் வங்கி, பென்னாகரம் கிளை மேலாளர் ராம்ஜி தொழில் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். பெண்கள் சுய உதவிக்குழுக்கள், வங்கியில் கடன் பெற்று கிராம புறங்களில் வேளாண் சார்பு தொழில்கள் தொடங்குவது குறித்தும், வங்கிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு உள்ள பொறுப்பு, கடமைகள் குறித்தும், தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல் குறித்தும், வங்கி அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினர்.வங்கி அதிகாரிகள், சுய உதவிக்குழு நிர்வாகிகள் கலந்துரையாடல் நடந்தது. இதில் ஏராளமான சுய உதவி குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

