/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை
/
பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை
பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை
பெங்களூருவில் ரூ.7 கோடி கொள்ளை தமிழக எல்லையில் போலீசார் சோதனை
ADDED : நவ 20, 2025 01:38 AM
ஓசூர், பெங்களூருவில், 7 கோடி ரூபாய் கொள்ளை போன நிலையில், தமிழக எல்லையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஜே.பி., நகரிலுள்ள தனியார் வங்கியிலிருந்து நேற்று, ஏ.டி.எம்., மையங்களில் நிரப்ப, 7 கோடி ரூபாயை, ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். பெங்களூரு அசோக் பில்லர் சாலையில் சென்றபோது, அவ்வழியாக டொயோட்டா இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள், பணம் ஏற்றிச்சென்ற வாகனத்தை வழிமறித்தனர். வாகனத்திலிருந்த ஊழியர்களிடம், தங்களை ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும், 7 கோடி ரூபாயை அந்த மர்ம கும்பல், தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றிக் கொண்டு தப்பினர்.
கர்நாடகா மாநில போலீசார், மர்ம கும்பலை பிடிக்க, பெங்களூருவில் வாகன சோதனையை மேற்கொண்டனர். கொள்ளை கும்பல் அண்டை மாநிலமான தமிழக எல்லை ஓசூர் வழியாக தப்பி விடாமல் தடுக்க, தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி, பூனப்பள்ளி, டி.வி.எஸ்., கக்கனுார் உள்ளிட்ட சோதனைச்சாவடிகளில், தமிழக போலீசார், நேற்று முழுவதும் வாகன சோதனை மேற்கொண்டனர்.

