/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வணிகர் சங்கங்கள், விவசாயிகளிடம் மனு பெற்ற இ.பி.எஸ்.,
/
வணிகர் சங்கங்கள், விவசாயிகளிடம் மனு பெற்ற இ.பி.எஸ்.,
வணிகர் சங்கங்கள், விவசாயிகளிடம் மனு பெற்ற இ.பி.எஸ்.,
வணிகர் சங்கங்கள், விவசாயிகளிடம் மனு பெற்ற இ.பி.எஸ்.,
ADDED : ஆக 20, 2025 01:38 AM
வேலுார், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணம் மேற்கொண்டுள்ள,
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., நேற்று, வேலுாரில், வணிகர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தொழில் வணிக உரிமை கட்டணம் மறு ஆய்வு செய்ய வேண்டும். உள்ளாட்சி, நகராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கு தீர்வு காண வேண்டும். மாதாந்திர மின்கட்ட நடைமுறை, ஸ்மார்ட் மீட்டர் திட்ட பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்லரை வணிகர்கள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வேளாண் பொருட்களுக்கு சுங்க கட்டணம் விலக்கு அளிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தில் அபராத தொகை என்பது அதிகமாக உள்ளதை, மறு ஆய்வு செய்ய வேண்டும். பழைய நகை, அடகு கடை வணிகர்கள் மீது, விதிகளுக்கு புறம்பாக போலீசார் அத்துமீறல் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நெல் ஒரு குவிண்டாலுக்கு, 3,500 ரூபாய் வழங்க வேண்டும். கரும்பு ஒரு டன்னுக்கு 6,000 ரூபாய் வழங்க வேண்டும். அணைக்கட்டு தொகுதியில் ஒரு மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், தனி நபர் பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். நெல் நடவு மற்றும் அறுவடை இயந்திரங்கள் வழங்க வேண்டும். நீண்டகால பயிர் கடன் வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் அசல் மற்றும் வட்டி இரண்டையும் ரத்து செய்ய வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஆந்திரா போலவே, மா பயிருக்கு, ஏக்கருக்கு, 20,000 ரூபாய் வழங்க வேண்டும். மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில், 1960ம் ஆண்டு தொடங்கப்பட்ட வடபுதுப்பட்டு ஆம்பூர் சர்க்கரை ஆலையை, உழவர்களின் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும். வேலுார் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுக்கத்துார் பகுதிகளில், அதிகப்படியான கொய்யா விவசாயம் நடப்பதால், அங்கு அரசு சார்பில் கூட்டுறவு கொய்யா பழ கூழ் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்தி தர வேண்டும். புவிசார் குறியீடு பெற்ற, இளவம்பாடி முள்ளு கத்திரிக்காயை வெளிமாநிலம், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய, அரசு சார்பில் கூட்டுறவு கொள்முதல் நிலையம், குளிர்விப்பு நிலையம் ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.