ADDED : ஆக 16, 2026 02:16 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: காரிமங்கலத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் சார்பில், 80ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில், காரிமங்கலம் கோட்ட தலைவர் ரகு தலைமை வகித்தார். துணைத்தலைவர் முருகன், செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான காரிமங்கலம் கோட்ட புதிய அலுவலகத்தை காரி-மங்கலம் தாசில்தார் சிவகுமார், நிர்வாக அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் திறந்து வைத்தனர். பாலக்கோடு அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., அன்பழகன் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
