/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இயற்கை உரம் பயன்படுத்துதல் விவசாயிகளுக்கு விளக்கம்
/
இயற்கை உரம் பயன்படுத்துதல் விவசாயிகளுக்கு விளக்கம்
இயற்கை உரம் பயன்படுத்துதல் விவசாயிகளுக்கு விளக்கம்
இயற்கை உரம் பயன்படுத்துதல் விவசாயிகளுக்கு விளக்கம்
ADDED : டிச 20, 2024 01:11 AM
காரிமங்கலம், டிச. 20-
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் தனியார் உர நிறுவனங்களின் சார்பில், இயற்கை உரங்களை பயன்படுத்துவது குறித்து, சேலம் மண்டல விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் விவசாயிகள் பயன்படுத்தும் பல்வேறு வகையான நவீன விவசாய கருவிகள் காட்சி படுத்தப்பட்டது. கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டு, இயற்கை உரங்கள், தேவையான கருவிகளை வாங்கிச் சென்றனர்.
தொடர்ந்து நடந்த இயற்கை உரம் குறித்த கருத்தரங்கில், விவசாயிகளுக்கு தங்களது விலை நிலங்களில் மண் பாதிப்படையாமல் மண் வளத்தை பாதுகாக்கவும், உணவு பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து, அறுவடை செய்யும் வகையில் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த மண்டல விவசாயிகள் கருத்தரங்க கூட்டத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.