ADDED : நவ 11, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை சந்தையில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை ஆரம்ப விலை, 10,000 ரூபாய் முதல், 16,000 ரூபாய் வரை விற்றது.
நேற்று ஆரம்ப விலை, 8,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 13,000 ரூபாய் வரை விற்றது. கடந்த வாரத்தை விட, 3,000 ரூபாய் விலை குறைந்தது. நேற்று, 3.38 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

