ADDED : நவ 19, 2026 02:11 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி லுார்துபுரத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் கோபிமான், 45, விவசாயி. திருமணம் ஆகவில்லை. இவர் அப் பகுதியில் உள்ள ஆரோக்கியதாஸ் என்பவரின் விவசாய நிலத்தில் நேற்று மதியம், 1:00 மணியளவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஆடு கிணற்றின் பிடுவு பகுதியில் தவறி விழுந்தது.ஆட்டை மீட்க கிணற்றில் இறங்கும் போது கோபிமான், கால் தவறி கிணற்றில் விழுந்தார். விழும் போது தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பொம்மிடி போலீசார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் வந்து, கோபிமான் உடலை மீட்டனர். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
