ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் மனித சங்கிலி போராட்டம்
ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் மனித சங்கிலி போராட்டம்
UPDATED : நவ 19, 2026 02:40 AM
ADDED : நவ 19, 2026 02:04 AM

தர்மபுரி: ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது.
நாகராஜன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் தமிழ்செல்வி, மாநில நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து ஓய்வூதியர்கள் மனிதசங்கிலி அமைத்து கோஷங்கள் எழுப்பினர். இதில், தற்போதுள்ள பழைய பென்ஷன் திட்ட ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய திருத்தத்தை வெளிப்படையாக உள்ளடக்கும் வகையில், 8வது ஊதிய குழுவின் ஆய்வு வரம்புகளை திருத்த வேண்டும். ஓய்வூதிய திருத்த செயல்பாட்டில் தற்போதுள்ள ஓய்வூதியதாரர்கள் குறித்தும், நியாயமாக பரிசீலனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஓய்வூதிய சரிபார்ப்பு சட்டம் - 2025யை திரும்ப பெற வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, 70 வயது நிறைவடையும் போது, 10 சதவீதம், 70 வயது நிறைவடைந்து, 80வது வயது தொடங்கும் நாளில் மேலும், 10 சதவீதமும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். தற்போதுள்ள மருத்துவ காப்பீடு திட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். விருப்புரிமை கோர வேண்டும். மாதாந்திர மருத்துவப்படியை, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியுதவியை, 50,000 ரூபாயிலிருந்து, 1.50 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
