ADDED : நவ 28, 2026 06:17 AM
பாப்பிரெட்டிப்பட்டி:பொம்மிடி அருகே, வனப்பகுதியில் மர்மமான முறையில்
விவசாயி இறந்து கிடந்தார்.
தர்மபுரி
மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டி
லுார்துபுரத்தை சேர்ந்தவர் ஜேசுதாஸ். இவரது மகன் ஜெயசீலன், 48,
விவசாயி. ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று மாலை, 4:00 மணியளவில்
அப்பகுதியில் உள்ள பொந்திகல் வனப்பகுதியில் மர்மமான முறையில்
இறந்து கிடந்தார். பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று,
ஜெயசீலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயசீலனை யாராவது
மின்சாரம் பாய்ச்சி கொலை செய்து விட்டு, வனப்பகுதியில் வீசி விட்டு
சென்றனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த, 18ம் தேதி
இவரது சகோதரர் கோபிமான் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
