ADDED : நவ 19, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாடு மிதித்து விவசாயி பலி
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 19---
பொம்மிடி அடுத்த வத்தல்மலை சின்னாங்காடு பகுதியை சேர்ந்தவர் மணி, 67. விவசாயி. இவர் கடந்த, 16ல் தன் தோட்டத்தில் இருந்த பசு மாட்டை பிடித்து கொண்டு வரப்பில் நடந்து வந்தார். அப்போது, பின்னால் வந்த மாடு, மணியின் முதுகின் மீது முன்னாங்கால் இரண்டையும் துாக்கி உதைத்ததில் மணி கீழே விழுந்தார். பின் மணியின், பின் கழுத்து பகுதியில் மிதித்ததில் மணி காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் மாலை, 7:40க்கு உயிரிழந்தார். பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

