தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கிணறு சுற்றுச்சுவர் கட்டும் பணி மண் சரிந்து விவசாயி பலி

கிணறு சுற்றுச்சுவர் கட்டும் பணி மண் சரிந்து விவசாயி பலி

கிணறு சுற்றுச்சுவர் கட்டும் பணி மண் சரிந்து விவசாயி பலி


UPDATED : அக் 25, 2026 03:05 AM

ADDED : அக் 25, 2026 02:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 03:05 AM ADDED : அக் 25, 2026 02:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி அருகே கிணறு சுற்றுசுவர் கட்டும் போது, மண் சரிந்து விவசாயி பலியானர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த திருமல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 55. விவசாயி. நேற்று முன்தினம், இவரின் விவசாய கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்ட, தன் உறவினர், 2 பேருடன் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதிய உணவு சாப்பிட உறவினர் இருவரும் சென்ற நிலையில், முருகன் மட்டும் தனியாக பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது மண் சரிந்து கிணற்றில் விழுந்துள்ளார். உறவினர்கள் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்து பாலக்கோடு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 60 அடி ஆழ கிணற்றில் ஹிட்டாச்சி உதவியுடன் கிணற்றில் இருந்த மண்ணை அகற்றினர். இரவு, 8:00 மணி வரை மீட்பு பணி நடந்தது. மழையால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் மீட்பு பணி தொடர்ந்தது. காலை, 10:30 மணியளவில் முருகன் சடலமாக மீட்கப்பட்டார். பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us