/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அமைச்சர்கள் சொத்து விபரம் கருத்தரங்கில் விவசாயிகள் ஆச்சரியம்
/
அமைச்சர்கள் சொத்து விபரம் கருத்தரங்கில் விவசாயிகள் ஆச்சரியம்
அமைச்சர்கள் சொத்து விபரம் கருத்தரங்கில் விவசாயிகள் ஆச்சரியம்
அமைச்சர்கள் சொத்து விபரம் கருத்தரங்கில் விவசாயிகள் ஆச்சரியம்
ADDED : அக் 25, 2024 01:03 AM
அமைச்சர்கள் சொத்து விபரம்
கருத்தரங்கில் விவசாயிகள் ஆச்சரியம்
தர்மபுரி, அக். 25-
வேணாண் துறை கருத்தரங்கில், அமைச்சர்களின் சொத்து விபரம் கூறப்பட்டதை கேட்டு, விவசாயிகள் ஆச்சரியம்அடைந்தனர்.
தர்மபுரியில் நேற்று, நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மற்றும், 4 மாவட்ட விவசாயிகளுக்கான வேளாண் கருத்தரங்கை, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில், பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி பேசுகையில், ''அமைச்சர் பன்னீர்செல்வம் மிகப்பெரிய விவசாயி. அவர், 500 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறார். எனவே, தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் குறைகள் மீது கவனம் செலுத்துவார்,'' என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், ''அமைச்சர் நேரு, 1,000 ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, தென்னை, நெல், பலா, கரும்பு, மிளகாய் விவசாயம் செய்து வருகிறார். அவர் மிளகாய் வியாபாரத்தை தொடர்ந்து செய்திருந்தால், மிகப்பெரிய ஏற்றுமதியாளராக வந்திருப்பார்,'' என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் நேரு பேசுகையில், ''தர்மபுரி உட்பட, 4 மாவட்டத்தில், மண் வளம் சிறப்பாக உள்ளது. இங்கு விளையும் வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டிய பொருட்களாக தயாரித்து, ஏற்றுமதி செய்யலாம். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். மேலும், பாலைவன பேரிச்சை கூட, சாதாரணமாக விளையக்கூடிய மாவட்டமாக தர்மபுரி உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் துறையில், 2 முறை மானிய கோரிக்கை வருகிறது. இதில், நகராட்சி நிர்வாகத்துறைக்கு ஆண்டுக்கு, 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், வேளாண் துறைக்கு, 55,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது,'' என்றார்.
கருத்தரங்கில், அமைச்சர்களுக்கு, 500, 1,000 ஏக்கர் சொத்து உள்ளதாக பேசியதைக் கேட்ட, சிறு, குறு விவசாயிகள் ஆச்சரியம் அடைந்தனர்.