/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இரை தேடி நெல்வயல்களுக்கு வரும் மயில்களால் விவசாயிகள் கவலை
/
இரை தேடி நெல்வயல்களுக்கு வரும் மயில்களால் விவசாயிகள் கவலை
இரை தேடி நெல்வயல்களுக்கு வரும் மயில்களால் விவசாயிகள் கவலை
இரை தேடி நெல்வயல்களுக்கு வரும் மயில்களால் விவசாயிகள் கவலை
ADDED : ஏப் 08, 2024 07:19 AM
தர்மபுரி : தர்மபுரியில், இரை தேடி நெல்வயல்களுக்கு வரும் மயில்களால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக, விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், வனப்பகுதிகளில் இருந்து இரை தேடி வரும் மயில்கள், நெல், கேழ்வரகு, மரவள்ளி, நிலக்கடலை செடிகளின் குருத்துகளை தின்று வருகின்றன. இதனால், செடிகள் முழுவதுமாக வளராததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, வனப்பகுதியை விட்டு வெளியேறி, நகர் பகுதிக்கு வரும் மயில்களை தடுத்து, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க, வேண்டுகோள் எழுந்துள்ளது.