/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மரவள்ளியில்செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
/
மரவள்ளியில்செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
மரவள்ளியில்செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
மரவள்ளியில்செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 13, 2025 01:50 AM
அரூர் தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, வேட்ரப்பட்டி, மாம்பாடி, எல்லப்புடையாம்பட்டி, ஈட்டியம்பட்டி, எம்.வெளாம்பட்டி, செட்ரப்பட்டி
உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் நடப்பாண்டு, 35,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். மரவள்ளியில் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மரவள்ளியில் தாய்லாந்து வெள்ளை, தாய்லாந்து கறுப்பு, முள்ளுவாடி, ரோஸ் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உள்ளிட்ட கிராமங்களில், 6மாத வயதுடைய மரவள்ளிக்கிழங்கு செடியில், செம்பேன் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலைகள் பழுத்து உதிர்வதால், மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஒவ்வொரு பூச்சி மருந்து கடையிலும் வெவ்வேறு விதமான மருந்துகளை வழங்குகின்றனர். இதுவரை, 2 மற்றும், 3 முறை பூச்சி மருந்து அடித்தும், நோய் தாக்குதல் குறைய
வில்லை. எனவே, நோயை கட்டுப்படுத்த, வேளாண் துறை மூலம் ஆலோசனை வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.