/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொப்பரை கொள்முதல் விவசாயிகள் கோரிக்கை
/
கொப்பரை கொள்முதல் விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2025 01:28 AM
அரூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய, 2 தாலுகாவில், அதிகளவில் தென்னை விவசாயிகள் உள்ளனர். அரூரில் அரசு சார்பில், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் இல்லாததால், உள்ளூர் வியாபாரிகளிடம் விவசாயிகள் கொப்பரை தேங்காயை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக கொப்பரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் ஒரு கிலோ, கொப்பரை, 240 முதல், 260 ரூபாய் வரை விற்பனையாகிறது.
ஆனால், அரூர் பகுதியில் உள்ளூர் வியாபாரிகள், ஒரு கிலோ தேங்காய் கொப்பரையை, 210 ரூபாய் என குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி கொப்பரை தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க, அரசு சார்பில், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.